சைக்கிள் போட்டியில் ஐவர் காயம்

0
150

தமிழ்-சிங்கள புதுவருட புத்தாண்டையொட்டி, அம்பாறை, கரன்காவ பிரதேசத்தில் இடம்பெற்ற சைக்கிள் ஓட்ட போட்டியின் போது, இடம்பெற்ற விபத்தில், சைக்கிள் போட்டியாளர்கள், குழந்தை உள்ளிட்ட ஐவர் காயமடைந்துள்ளனர்.

சைக்கிள் ஓட்டப்போட்டி, நேற்று ஞாயிற்றுகிழமை (16) இடம்பெற்று கொண்டிருந்த போது,   முச்சக்கரவண்டியொன்று, குறுக்காக பயணித்தமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த ஐவரும், அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.