முனைப்பினால் மனிதாபிமான உதவி

0
319

முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதுவருடத்தில் இரு மனிதாபிமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமடைந்த மற்றும் இயற்கை மரணமெய்திய இருவரின் குடும்பங்களுக்கே மனிதாபிமான அடிப்படையில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா, குறிஞ்சாமுனை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் பிரேதங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து, உரியவர்களின் இல்லங்களுக்கு கொண்டு செல்வதற்கே குறித்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த உதவியினை முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மா.சசிகுமார், மற்றும் பொருளாளர் தயானந்தரவி ஆகியோர் வைத்தியசாலைக்கு நேரடியாக சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் உதவியை வழங்கி வைத்துள்ளனர்.
முனைப்பு நிறுவனமானது பல வருடங்களாக பல்வேறு உதவித் திட்டங்களை வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக கல்விக்கான உதவி, வாழ்வாதாரத்திற்கான உதவி, அனர்த்தங்களின் போதான உதவி மற்றும் மரணமடைந்தவர்களின் பிரேதங்களை கொண்டு செல்வதில் நிதியுதவியின்றி இருப்பவர்களுக்கான நிதியுதவியினையும் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.