துறைநீலாவணையில் சித்திரை புத்தாண்டு விளையாட்டு

0
332

(க.விஜயரெத்தினம்) துறைநீலாவணை இளைஞர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட சித்திரை புத்தாண்டு விளையாட்டுப் போட்டியானது சனிக்கிழமை(15.4.2017) துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் அமைப்பின் தலைவர் அரசரெத்தினம்-வேளராசு தலைமையில் நடைபெற்றது.

இவ்கலாச்சார விளையாட்டுக்களில் மரதன் ஓட்டம்,தோணி ஓட்டம்,தேங்காய் திருவுதல்,வழுக்குமரம் ஏறுதல்,திருமணமாகாத இளம் காளையர்களுக்கும்,திருமணமான குடும்பத்தலைவர்களானயிடையிலான கயிறுயிழுத்தல் போட்டி,நெற்றி சுற்றி ஓடுதல்,தண்ணீர் குடித்தல்,சைக்கிள் மோட்டார் சைக்கிள் மெல்லொட்டம்,வினோத உடைப்போட்டி, மிட்டாய் ஓட்டம்,போன்ற விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது.

அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களை கௌரவித்தல்,க.பொ.த.சாதாரணப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்றவர்களை கௌரவித்தல் போன்றன நடைபெற்றது. பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றி முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசில் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

7 1 2 3 4 5 6