காஞ்சிரங்குடாவில் விபத்து ஒருவர் உயிரிழப்பு மூவர் காயம்

0
313

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா பிரதான வீதியில் நடைபெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்த சம்பவம்  வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டி மோதியதிலே குறித்த விபத்து நடைபெற்றுள்ளது. துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்த, 48வயதினை உடைய 5பிள்ளைகளின் தந்தையான வயிரமுத்து யோகலிங்கம் என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி  சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் காயமடைந்த ஏனைய மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை வவுணதீவு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் பிரேரத்திணை வைத்தியசாலையில் இருந்து இல்லத்திற்கு கொண்டு செல்வதற்காக முனைப்பு ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் பணஉதவியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.