மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னையாவின் புதுவருட வாழ்த்துச் செய்தி

0
278
bishop-a(சிவம் பாக்கியநாதன் )
புதிய நல்லாட்சி அரசில் இன, மத, மொழி மற்றும் கலாசார ரீதியில் வேறுபாடுகள் இன்றி நல்லிணக்கத்தோடு மக்களை ஒன்றிணைக்கும் ஆண்டாக புதிய ஏவிளம்பி தமிழ் சிங்கள சித்திரைப் புதுவருடம் பிறக்க வேண்டும் அது எமது நாட்டிற்கு ஒரு மாபெரும் பாக்கியமாக அமையும் என மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா தெரிவித்தார்..

பிறக்கவிருக்கும் புதிய ஏவிளம்பி தமிழ் சிங்கள சித்திரைப புதுவருடப் பிறப்பினை முன்னிட்டு ஆயர் தெரிவித்துள்ள வாத்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
சிறுபான்மை இன மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி அனைவரினதும் ஒருமித்த முயற்சியினால் புதிய நல்லாட்சி அரசு ஏற்படுத்தப்பட்டது. இவ்ஆட்சியில் மக்கள் ஒருவரையொருவர் பரஸ்பர அன்னையும், ஒற்றுமையையும் பேணிக்கொள்வதோடு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அரசியல் வேறுபாடுகள் இன்றி மனிதம் பேணப்படுமானால் எமது நாடு சாந்தியும், சமாதானமும் பிரகாசிக்கும் ஒரு தேசிய உணர்வுமிக்க ஆண்டாக மிளிரும்.
புதுவருடப் பிறப்பானது பல்லின மக்களின் குரோதங்கள், சந்தேகங்கள் மற்றும் வறுமை என்பன அகன்று ஒருவரை ஒருவர் நேசிக்கும் சுபீட்சம் மிக்க ஆண்டாக மலரவேண்டும் என வாழ்து;துவதோடு அனைவருக்கும் இனிய புதுவருட நல் வாழ்த்துக்ளைத் தெரிவப்பதாக அச்செய்தில் குறிப்பிட்டுள்ளார்.