மட்டக்களப்பு மதுபானசாலைகளில் நிரம்பிவழியும் மதுப்பிரியர்கள்

0
377

arack-aமட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் மதுபானசாலைகளில் நேற்று (12) இரவு வேளைவரை அனைத்தும்  மதுப்பிரியர்களினால் மதுபானசாலைகள் நிரம்பி வழிந்தமையினைக் காணக்கூடியதாகவுள்ளது..

யுத்தத்தின் பின்னரான சமூக சீர்கேடாகவும் வடக்கிழக்கு தமிழ் மக்களின் அன்றாட வாழ்வை படிப்படியாக அழித்துக் கொண்டவரும் அதிகாரித்த மதுபானசாலைகளின் பிரசன்னம் மதுபானசாலைகள் அங்காங்கே மாவட்டம்தோறும் காணப்படுகின்றது.
அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் அண்மைக்காலமாக அதிகாரித்த மதுபானசாலைகள் காரணமாக தனிமனித குடும்ப வாழ்க்கை கேள்விகுறியாகிய நிலையில் காணப்படுகின்றது.

அதேவேளை நாளைய தினம் (14) மலரவுள்ள சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு நேற்று இரவுவேளை (12) மட்டக்களப்பு மாவட்டம்தோறும் காணப்படும் மதுபானசாலைகளில் மதுப்பிரியர்களினால் நிரம்பிவழிந்த நிலையில் வீதியோரமெங்கும் வாகன நெரிசல் போக்குவரத்து சிரமங்களையும் அவதானிக்ககூடியதாகவுள்ளது.

அண்மையில் அதிகரித்த மதுபானசாலை மற்றும் மட்டக்களப்பு கல்குடா கும்புறுமூலை பகுதியில் பாரிய மது உற்பத்திச் தொழில்சாலை போன்றவற்றின் காரணமாக பாரிய பிரச்சினை காணப்படுகின்றது.

அதுமட்டுமின்றி கடந்த மாதப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட அரச உத்தியோர்களின் மது விருந்துபசாரம் என்ற செய்தி பாரிய சமூகப் பிரச்சினையை பல்வேறுபட்டகளில் வெட்கித்தலை குனியவைத்த நிலையும் அண்மையில் பதிவாகியிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் தொடக்கம் மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் போன்ற பல நிகழ்வுகளில் புள்ளித்தரவுகளை வைத்து மட்டக்களப்பு மாவட்டம் வறுமைக்கோட்டில் முன்னிற்கின்றது என வாய்கிழியபேசும் உயர் அதிகாரிகள், மாவட்டத்திலுள்ள மதுபானசாலையை குறைப்பதற்கு ஏதும் நடவடிக்கை எடுக்கின்றார்களா என்றால் அனைவரும் அறிக்கைவாதிகளாகவே இருக்கின்றார்கள்.

இதனால் அன்றாம் உழைத்துக் கொண்டு வீட்டுக்கு வரும் வழியிலே அதிகமானவர்களின் பணப்பை காழியாகிவிடுகின்றது. அதன் பின்னர் தற்கொலை, வீட்டில் தகராறு, வெட்டுக்குத்து போன்ற குடும்பப் பிரச்சினைகளைத் தோற்றுவிற்கின்றது என பலரின் காருத்தாகயிருக்கின்றது.

சித்திரை வருடப் பிறப்பு என்றால்  பட்டாசு வெடியினால் கடந்த காலங்களில் அதிக பாதிப்புக்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் பல பதிவாகியுள்ள நிலையில் அவை படிப்படியாக குறைவடைந்து கொண்டுவருகின்றது.

ஆனால் தற்பொழுது  காலமாற்றங்களுக்கு ஏற்ப மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவு பட்டாசு பாவனையில் பாதிக்கப்பட்டு வரும் விபத்துக்களை விட மதுபோதையின் காரணமாக வெட்டுக் குத்து, குடும்பத்தகராறு போன்ற விபத்தினால் வருகின்றவர்களுக்கு சிகிச்சையழிப்பதற்காக தயாராகவுள்ள நிலையைமைய அறிக்கூடியதாகவுள்ளது.
கடந்த காலத்தில் யுத்தம் காரணமாக அழிந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் சமூகம் எதிர்காலத்தில் அதிகரித்துவரும் மதுபானசாலை நிலையம், மதுபான சாலை உற்பத்தித் தொழில் சாலைகளின் பிரன்னத்தினால் குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் சமூக சீர்;கேட்டுக்குள்ளாகின்ற நிலைமைய அதிகாரிக்குமென பல புத்திஜீவிகளின் கருத்தாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.