கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலிருந்து கதிர்காமத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயணம்

0
841

(படுவான் பாலகன்) ஏ விளம்பி வருடத்தினை கதிர்காம கந்தனின் ஆலயத்தில் இருந்து வரவேற்று, அங்குள்ள இறைவனை தரிசிக்கும் பொருட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலிருந்து இன்று(13) வியாழக்கிழமை காலை புறப்பட்டு சென்றனர்.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் கற்பூரம் எரித்து, தேங்காய் உடைத்து இறைவனை வணங்கியதன் பின்பு அங்கிருந்து பேரூந்து மற்றும் ஏனைய வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.

கதிர்காம முருகனுக்கு நேர்த்தி வைத்து, வாயிலே அலகு குத்தி நேர்த்தியை நிறைவு செய்யும் பொருட்டு பல அடியார்கள் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

வருடாந்தம் சித்திரைப்புத்தாண்டு தினத்தன்று கதிர்காம முருகனின் தரிசனத்தினை பெறுவதற்காக ஆயிரக்கணக்கான அடியார்கள் இவ்வாலயத்தில் இருந்து செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

DSC05206 DSC05199 DSC05201 DSC05204 DSC05205