காணிகளை விடுவிப்பது குறித்து 24ஆம் திகதியன்று பேச்சுவார்த்தை

0
540
swaminathan-aaவட – மாகாணத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள எஞ்சிய காணிகளை விடுவிப்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் படைத் தளபதிகளுடன் கலந்துரையாடப்பட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவுள்ளது.

  புனர்வாழ்வு மீள்குடியமர்வு சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர்  அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இதனை தெரிவித்துள்ளார்..
  இதுதொடர்பாக அமைச்சர் மேலும் கூறியதாவது , எதிர்வரும் 24ஆம் திகதியன்று சம்பந்தப்பட்ட  அனைத்து அமைச்சர்கள் மற்றும் படைத் தளபதிகளுடனான சந்திப்பொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் போது  வடக்கில் எந்தெந்த இடங்களை, எக்காலப்பகுதியில் விடுவிப்பது என்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு அது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றார்.