விவசாயிகளுக்கு இழப்பீடு வங்கிக் கணக்குகளில் வைப்பீடு

0
193
கடந்த பெரும் போகத்தில் 11 மாவட்டங்களில் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு உரிய முதல் கட்ட இழப்பீட்டு கொடுப்பனவு கடந்த வெள்ளிக்கிழமை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தேசிய சேமிப்பு வங்கி, கிராமிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் ஊடாக இழப்பீட்டுத் தொகையைப் பெறலாம். இழப்பீடு வழங்க திறைசேரி 730 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இது தொடர்பாக கமநல காப்புறுதிச் சபையின் தலைவர் சிட்னி கஜநாயக்க தகவல் தருகையில்   கடந்த பெரும்போக நெற்செய்கையில் பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகள் வங்கிகள் ஊடாக இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
நெற்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகள், நெற்செய்கை மேற்கொள்ள முடியாமல் போன விவசாயிகள், மேலதிக பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகள் என்ற ரீதியில் வேறுபடுத்தி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.