உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை பழைய முறைமையின் கீழ் நடத்த வேண்டும் .UNP

0
401

kabeer-aஉள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை புதிய முறை­மையின் கீழ் நடத்­தினால் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பாதிப்­பாகும் என்றால் அதனை எம்மால் ஏற்க முடி­யாது.

ஆகவே தேர்­தலை தாம­தப்­ப­டுத்­தாமல் பழைய முறை­மையின் கீழ் நடத்­து­மாறு ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

அத்­துடன் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்கு முன்பு மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல்களை நடத்­து­வ­தற்­கான எந்­த­வொரு பேச்­சு­வார்த்­தையும் நடக்­க­வில்லை. மாகாண சபை தேர்­தலை முதலில் நடத்­து­வது தொடர்பில் ஜனா­தி­ப­தி­யினால் அறி­வு­றுத்­தப்­ப­ட­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்­டார்..

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வின­வியபோதே ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீல் ஹாஷிம் ேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் தொடர்ந்து தாம­த­மா­கு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எனினும் தாம­த­க­மா­கு­வ­தற்கு நாம் பொறுப்­பல்ல. நாம் தேர்­த­லுக்கு முகங்­கொ­டுப்­ப­தற்கு தயா­ரா­கவே இருக்­கின்றோம்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன புதிய முறை­மையின் கீழ் தேர்­தலை நடத்­து­வ­தில் உறு­தி­யாக உள்ளார். புதிய முறை­மையில் எமக்கு எந்­த­வொரு பிரச்­சி­னையும் இல்லை.

எனினும் சிறு­பான்மை இனங்­களை பிர­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
சிறு­பான்மை இனக் கட்­சிகள் மாத்­திரமின்றி சிறிய அர­சியல் கட்­சிகள் தொடர்­பிலும் நாம் அவ­தானம் செலுத்த வேண்டும். ஜன­நா­யக முறை­மையை பேணும் தேர்தல் முறைமை அமைய வேண்டும்.

எனவே, புதிய முறை­மையின் கீழ் தேர்­தலை நடத்­தினால் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பாதிப்­பாகும் என்றால் அதனை எம்மால் ஏற்க முடி­யாது. ஆகவே தேர்­தலை தாம­தப்­ப­டுத்­தாமல் பழைய முறை­மையின் கீழ் நடத்த வேண்டும். ஏனெனில் தற்­போது தேர்தல் நன்றாக தாமதம் செய்யப்பட்டுள்ளது.

கிராமப் பகுதிகளில் சில அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுப்பதற்கு சிரமமாக உள்ளது. எனவே பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.