அகில இலங்கை வைத்தியசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஆதாரவைத்தியசாலை முதலிடம்

0
543
kalmunai-a kalmunai-bசகா)
 
அகிலஇலங்கை ரீதியாக 22முன்னணி வைத்தியசாலைகள் பங்கேற்ற அணிக்கு 6பேர்கொண்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஆதாரவைத்தியசாலை முதலிடம்பெற்று சாம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துச் சாதனை படைத்துள்ளது..

 
கொழும்பு தேசிய வைத்தியசாலை லேடிறிஜ்வே வைத்தியசாலை கண்டி போதனா வைத்தியசாலை காலிகராப்பிட்டிய பேhதனாவைத்தியசாலை உள்ளிட்ட பிரபலமான 22வைத்தியசாலைகள் இச்சுற்றுப்போட்டியில் பங்கேற்றன.
 
களுபோவிலை தெற்கு போதனா வைத்தியசாலையின் நலன்புரி ஒன்றியம் இச்சுற்றுப்போட்டியை ஒழுங்கு செய்திருந்தது. தெஹிவல யசின்கா  மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெற்றன.
 
வடக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து இச்சுற்றுப்போட்டியில் கலந்துகொண்டது கல்முனை ஆதார வைத்தியசாலை மட்டுமே.
 
கல்முனை ஆதாரவைத்தியசாலை அணி மொத்தமாக 6போட்டிகளைச்சந்தித்து இத்தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
 
ரி.மோகனசாந்தனை அணித்தலைவராகவும் பி.செல்வகுமாரை முகாமையாளராகவும் கொண்ட கல்முனை ஆதாரவைத்தியசாலை அணியை வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் வழிநடாத்தினார்.
 
சுற்றுத்தொடரின் சிறந்தவீரருக்கான விருது சிறப்பாட்டக்காரர் விருது சிறந்தபந்துவீச்சாளர் ஆகிய 3மேலதிக விருதுகளையும் கல்முனை அணியே சுவீகரித்துக்கொண்டது.
 
இந்தசுற்றுப்போட்டியின் முதலிடத்தை கல்முனை ஆதாரவைத்தியசாலையும் இரண்டாமிடத்தை கொழும்பு லேடி றிஜ்வே வைத்தியசாலையும் மூன்றாமிடத்தை கொழும்பு தேசியவைத்தியசாலையும் பெற்றுக்கொண்டன.
 
இதன்பலனாக சிறந்த சுகாதார வைத்திய சேவை மற்றும் பராமரிப்புத்துறைகளில் தேசிய ரீதியில் முதலிடத்தைப்பெற்றுவந்த கல்முனை ஆதாரவைத்தியசாலை கிரிக்கட் சுற்றுப்போட்டியிலும்  மகத்தான வெற்றிபெற்று  மற்றுமொரு  வியத்தகு சாதனையை நிகழ்த்தியுள்ளமை பலரையும் பாராட்டவைத்துள்ளது எனலாம்.
 
இச்சாதனை தொடர்பில் வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரனிடம் கேட்டபோது:
 
இறைவனின் ஆசியுடன் களமிறங்கினோம். கிரிக்கட்டில் துறைபோன பெரியபெரிய மாநகர வைத்தியசாலைகளுடன்  மோதி இச்சாதனையை எமது வைத்தியசாலை ஊழியர்கள் நிகழ்த்திக்காட்டியுள்ளனர்.
இதுவொரு சாமானியமான சாதனை அல்ல.இது தனிப்படடஒருவரின் வெற்றி அல்ல. எமது குழாத்தினரின் அர்ப்பணிப்புக்குக்கிடைத்த வெற்றி இது கூட்டுமுயற்சி. இமாலயச்சாதனை எனலாம். அந்தளவிற்கு கிரிக்கட்டில் துறைபோன கொழும்புகாலி போன்ற நகர்ப்புற வைத்தியசாலைகளின் அணிகள் கலந்துகொண்ட இப்போட்டியில் நாம் வெற்றிபெற்றது உண்மையில் மகத்தான சாதனைதான். இச்சாதனைக்கு பின்னால் நின்ற வீரர்கள் முகாமைத்துவக்குழுவினர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். என்றார்.