மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாகிரக போராட்டம் இன்று(11) செவ்வாய்கிழமை 50வது நாளாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பு முன்னெடுக்கப்பட்டது.
தமக்கான நியமனத்தினை வழங்குமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பு உள்ள மணிக்கூட்டு கோபுரத்தினை வளைத்து நின்று கறுப்புக்கொடியை கையிலேந்தி மாதங்கள் கடந்தும் தமது தொழில் உரிமை மறுக்கபட்டுள்ளதாக கூறிகோசங்களையும் இட்டனர்.
காந்திபூங்கா முன்பு உள்ள பாலத்தில் வரிசையாக நின்று, கோசங்களை எழுப்பியதுடன், மறுக்கப்பட்ட தொழில் உரிமை, நல்லாட்சி நல்லாட்சி பட்டதாரிகளுக்கு கள்ளாட்சி, மௌனிக்கப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலம், அரச சுபபோகங்களுக்கு அடிமையாகிபோனதா எதிர்கட்சி போன்ற வாசங்கள் அடங்கிய பதாதைகளை கையிலேந்தியும், தொங்கவும் விடப்பட்டிருந்தன.
வாயில்கதவு போன்று போராட்டம் இடம்பெறும் இடத்தின் முன்னால் அமைக்கப்பட்டு 50வது நாள் எனவும் அதில் எழுதப்பட்டிருந்தது. மேலும் பட்டச்சான்றிதழ்களின் பிரதிகளும் அதில் ஒட்டப்பட்டிருந்தன.