கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் இரு இடங்களில் விபத்து 3மூவர் காயம்

0
1740

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் பிற்பகல்  பேரூந்து ஒன்று இரு மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் மோதி விபத்துக்குள்ளான சம்பம் இன்று(11) பிற்பகல் மூன்று மணியளவில் நடைபெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மகிழடித்தீவு பகுதியில் இருந்து கொக்கட்டிச்சோலை பகுதியை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு வருகை தந்த பேரூந்து நேராக வருகைதந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வீதியின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீதும் மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்களே காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலைப் பிரதான வீதியில் பேரூந்தொன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பமும் இன்றைய தினம் 2.30மணியளவில் நடைபெற்றுள்ளது.

கொக்கட்டிச்சோலை பகுதியினை நோக்கி வருகை தந்த பேரூந்து வாய்க்கால்பாலம் எனும் இடத்தில் உள்ள, வீதியின் அருகில் இருந்த பனைமரம், வேம்புமரம் போன்றவற்றில் மோதி அவை பிடிங்கி எறியப்பட்டு வயலுக்குள் பேரூந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தியில் தெய்வாதீனமாக சாரதி மற்றும் பேரூந்தில் பயணித்தவர்கள் உயிர்தப்பியுள்ளனர்.

குறித்த விபத்துக்கள் தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இரு இடங்களிலும் ஒரே உரிமையாளரின் பேரூந்தே விபத்துக்குள்ளாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

20170411_145347 20170411_143936 20170411_143952 20170411_144044 20170411_144128 20170411_144317 20170411_145121 20170411_145150 20170411_145215 20170411_145250 20170411_145318 20170411_145328