கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையின் வழிகாட்டலில் தல யாத்திரை.

0
363

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையின் வழிகாட்டலில்; தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்ட சமூக மேம்பாட்டு அமைப்பினால் வெள்ளிக்கிழமை(7) மேற்கொள்ளப்பட்ட தலயாத்திரை இன்றுடன் நிறைவுற்றது.

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஸ்யந்தன் தலைமையில் தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்ட சமூக மேம்பாட்டு அமைப்பின் உறுப்பினர்களும் கிராம மக்களும் இணைந்து மேற்கொண்ட யாத்திரையானதுஇ தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்ட கிராமத்தில் இருந்து 07.04.2017 அதிகாலை 5.00 மணிக்கு ஆரம்பமானது. வெருகல் முருகன் ஆலயம்இ திருகோணமலை கோணேச்சரர் ஆலயம் மற்றும் லஷ்மி நாராயணன்; ஆலயத்தை தெடர்ந்து யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தை சென்றடைந்தனர். மறுநாள் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான யாத்திரையானது நயினாதீவு நாகபூசனி அம்மன் மரதனார் மடம் ஆஞ்சனேயர் ஆலயம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம் மற்றும் மாவிட்டபுரம் கந்த சுவாமி ஆலயத்தை தொடர்ந்து கீரிமலை நகுலேச்சர ஆலயத்தை சென்றடைந்தனர். அடுத்தநாள் மன்னார் திருகேதீச்சரம் மற்றும் மடு மாதாவை தரிசித்து மீண்டும் தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்ட கிராமத்தை வந்தடைந்தனர்.

 

 

unnamed (6) unnamed (3) unnamed (4) unnamed (5)