கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வருடப்பிறப்பு விசேட பூசை

0
410

பிறக்கின்ற ஏவிளம்பி வருடத்தினைச் சிறப்பித்து வரலாற்று சிறப்புமிகு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூசை ஆராதனைகள், மருத்துநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கைவிசேடமும் நடைபெறவுள்ளன.

பூசை ஆராதனைகள் வியாழக்கிழமை பின்னிரவு 01மணிக்கும், வெள்ளிக்கிழமை காலை 06மணிக்கும் நடைபெறவுள்ளன. மருத்துநீர் வழங்குகின்ற நிகழ்வு வியாழக்கிழமை முன்னிரவு 07மணியில் இருந்து வழங்கப்படவுள்ளதாகவும். இதனை வியாழக்கிழமை முன்னிரவு 08மணி 48நிமிடம் தொடக்கம் வெள்ளிக்கிழமை அதிகாலை 4மணி 48நிமிடம் வரையுள்ள புண்ணியகாலத்தில் மருத்துநீர் தேய்க்க முடியும் எனவும் ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்..