இந்து ஆலயங்கள் வர்த்தக நிலையங்களாக மாற்றம்

0
1198

இந்து ஆலயங்கள் வர்த்தக நிலையங்களாக மாறுகின்றன. இதனால் இந்துசமயம் அழிகின்றது. கோயில்களின் வருமானத்திற்காக கடைகளை அமைக்க இடம்கொடுக்கின்றோம்;. இதனால் எமது கலாசாரம் அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருக்கின்றது. என கயாத்ரி பீட பிரதமகுரு சிவயோக செல்வன் த.சாம்பசிவம் தெரிவித்தார்.

முதலைக்குடா ஏகதந்தன் இந்து இளைஞர் அபிவிருத்திச் சங்கத்தின் 40 அண்டு அகவை நிகழ்வும், சால்வை வெளியீடும் முதலைக்குடாவில் இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டார்.

பிரதமகுரு தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,

இந்துசமயம் என்கின்றபோது, அது எம்மை வாழ்விப்பதாக இருக்க வேண்டும். எங்களை வழிக்கி விழ செய்வதாக இருக்க கூடாது. வீதிகள் எல்லாம் விதியை மாற்றுகின்றது. ஆலயங்களிலே வெடில்களை கொழுத்தி பணத்தினை செலவு செய்வதனை விட்டு, கல்விக்காக சமூகத்திற்காக உதவி செய்தால் சமயம் நிலைத்து நிற்கும். அவ்வாறான வேலைகளை செய்வதற்கு தவறுகின்றோம். கோயிலை உடைத்து, உடைத்து மீண்டும், மீண்டும் கட்டுவதனையே செய்து கொண்டிருக்கின்றோம். இதனால்தான் எமது சமயம் சீரழிந்து கொண்டிருக்கின்றது. சமூகத்திலே கற்பதற்கு வசதியின்றியும், உண்பதற்கு உணவில்லாமலும், விவசாயம் செய்வதற்கு பணவசதியின்றியும் பல இன்னல்களை எதிர்கொண்டிருக்கின்றனர். இவ்வாறானவர்களுக்கு ஆலயங்கள் உதவி செய்தால் சமயத்தினை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்றார்.