ஊடகங்கள் மக்கள் கையில் : பொறுப்பாக பயன்படுத்த வேண்டும்.

0
465

தற்கால சூழலில் ஊடகங்கள் மக்கள் கைகளுக்கு கிடைத்திருக்கின்றன. அவற்றினை பொறுப்பாக பயன்படுத்த வேண்டுமென சிரேஸ்ட ஊகவியலாளர் பூ.சிவகன் குறிப்பிட்டார்.

ஊடக விஞ்ஞானம்! அறிதலும் சாதக வழி பிரயோகமும் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில், விஞ்ஞானத்தின் ஊடாக சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இதனை குறிப்பிட்டார்.

ஊடகங்கள் ஆரம்பத்தில் சைகைகள், வாய்வழியாக தொடங்கி இன்று சமூகவலைத்தளங்கள் வரை வளர்ச்சி கண்டிருக்கின்றது. இதனால் வாசகர்கள் அனைவரும் ஊடகவியலாளர்களாகவும், ஊடகம்மொன்றினை வைத்திருக்கின்றவர்களாகவும் உள்ளனர். இதனால் பல்வேறு பதிவுகளை சமூகவலைத்தளங்களிலே இடுக்கின்றனர். இவ்வசதி வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றது என்பதாக அவற்றினை தவறாக பயன்படுத்தாமல் பொறுப்பாக பயன்படுத்த வேண்டும்.

மாற்றத்திற்கு இசைபாக்கம் கொடுத்து செல்கின்றவர்களாவே நாமும் மாற வேண்டும். நாம் அதற்கு இசைபாக்கம் அடையாவிட்டாலும் அது வளர்;ச்சியடைந்து கொண்டே செல்லும். தற்கால ஊடகங்களை தவறாக பயன்படுத்தினால், அவை எமக்கு ஆபத்தானதாகவே அமையும். என்றார்.

இதில் ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்த கொண்டனர்.