அதிகளவில் நீரை அருந்துங்கள் – வைத்தியர்கள் வலியுறுத்தல்

0
277

நாட்டில் தற்பொழுது நிலவும் கடும் வெப்பம் மேமாதம் வரையில் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் முடிந்தளவு நீரை அருந்துமாறு கண்சத்திரசிகிச்சை சங்கத்தின் தலைவர் டொக்டர் மதுவந்தி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்பொழுது கடும் வெப்பம் நிலவுவதால் கண்நோய் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக கண்சத்திரசிகிச்சை சங்கத்தின் தலைவர் டொக்டர் மதுவந்தி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

வெப்பநிலை அதிகரிப்பதை அடுத்து வைரஸ்நோயும் பரவ ஆரம்பித்துள்ளது. கண்நோயும் பல இடங்களில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இக்காலப்பகுதியில் சிறுவர்கள் மற்றும் நோயாளர்கள் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.