மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலைக்குடா ஏகதந்தன் இந்து இளைஞர் அபிவிருத்திச் சங்கத்தின் 40வது ஆண்டு நிறைவு விழாவும் சால்வை வெளியீடும் சனிக்கிழமை இரவு முதலைக்குடா கண்ணகி கலையரங்கில் இடம்பெற்றது.
40வது ஆண்டு அகவை, முதலைக்குடா ஏகதந்தன் இந்து இளைஞர் அபிவிருத்திச் சங்கம் என அச்சிடப்பட்ட சால்வைகள் இதன்போது வெளியிடப்பட்டன.
முதல்சால்வையை சங்கத்தின் தலைவர் சு.தனேஸ்காந் சிவயோகச் செல்வன் த.சாம்பசிவம் அவர்களுக்கு இடுப்பில் அணிந்து வெளியிட்டு வைத்தார். தொடர்ந்து த.சாம்பசிவம் அவர்களினால் அதிதிகளாக கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் ஏனையோருக்கும் வழங்கி வைத்தார்.
சால்வை வெளியீட்டுக்காக அனுசரணை வழங்கிய நபர்களுக்கும், இதன் போது நினைவுச்சின்னம், சால்வை போன்றவையும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய குரு ஆகியோரும் கலந்து கொண்டனர்.