1989ல் என்னிடம் இருந்த சொத்து ஒரு துவிச்சக்கர வண்டி மாத்திரமே. இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.ஏம்.ஹிஸ்புள்ளாஹ்

0
650

1989ம் ஆண்டு நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற பொழுது என்னிடம் இருந்த சொத்தாக கருதப்பட்டது ஒரு துவிச்சக்கர வண்டி மாத்திரமே. இவ்வாறு தெரிவித்தார் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.ஏம்.ஹிஸ்புள்ளாஹ்

காத்தான்குடியில் இன்று (திங்கட்கிழமை) ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் 25 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையை எடுத்துக் கூறும் கிழக்கின் வாசல் நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.இந்த நிகழ்வில், கலந்து கொண்டு பேசும் போதே இதனை கூறியுள்ளார்..

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

துவிச்சக்கரவண்டியின் பெறுமதி அன்றைய நிலையில் 650ரூபாய்கள் மாத்திரமே. அதனோடு சேர்த்து இரண்டு காற் சட்டைகளும், இரண்டு சேட்களும் மாத்திரமே இருந்தது. நான் மிகவும் சாதாரனமான வறிய குடும்பத்தில் பிறந்தவன். நாங்கள் ஒரு நாளைக்கு ஒரு தடைவை சாப்பிடுவதற்கு கூட கஸ்ட்டமான சூழ் நிலையிலேயே வாழ்ந்து வந்தோம்

நான் முதன் முதலாக பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு செல்கின்ற வேலையில் என்னிடம் புதிய சேட் வாங்குவதற்கு கூட வசதி இருக்கவில்லை. ஆகவே அவ்வாறு இருந்த என்னை அல்லாஹ் பாராளுமன்றத்திற்கு அனுப்பி பதவிகளையும், அதிகாரங்களையும் தந்து சோதிக்கின்றான்.

இறைவன் எங்களுக்கு தந்துள்ள பதவிகள் அனைத்தும் அமாணிதமாகும். அவைகளை பற்றி நாங்கள் எல்லோரும் கேள்விக்கு உட்படுத்தப்படுவோம் என்பதில் நாங்கள் மிக தெளிவாக நடந்துகொள்ள வேண்டும். எங்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் மரணத்தின் பின்னர் நானும் நிச்சயமாக கேள்விக்கு உட்படுத்தப்படுவேன்..

அந்த வகையிலே ஜனாதிபதி தொடக்கம் கடையில் இருக்கின்ற சிப்பந்தி வரையில் நாங்கள் எலோரும் இறைவனுடைய கேள்விக்கு உட்படுத்தபடுபவர்களாகவே காணப்படுவோம். அதனை நினைத்து அல்லாவிற்கு பயந்தவனாக என்னுடைய வாழ்க்கையில் நான் எப்பொழுதும் கடைப்பிடித்து வருகின்ற விடயமாக எனக்கு இறைவன் தந்துள்ள அமாணிதங்களை பாதுகாத்து வருகின்றேன் என்றார்.

சபாநாயகர் கருஜயசூரிய தனதுரையில்
புத்தர் ஒரு போதும் இனவாதத்தினை மத வாத்தினை பற்றி பேசவில்லை. நான் ஒரு பௌத்த மதத்தினை பின் பற்றுபவராக இருக்கின்றேன்.

இனவாதம் மதவாதத்தினை தோற்கடித்து இந்த நாட்டை வெற்றிகொள்ளச் செய்ய நாம் அனைவரும் ஒன்றுபட்டுழைக்க வேண்டும்

உலகம் முழுவதும் ஆங்காங்கே குண்டு சத்தங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் இலங்கையில் மிகவும் அமைதியான அரசியல் சூழ்நிலை நிலவுகின்றது.

நாமும் சிங்கப்பூர் , துபாய் நாடுகளை போன்று முன்னோக்கி செல்ல வேண்டும். இதற்காக சகல மக்களும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும்.

தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என எவராக இருந்தாலும் எவரையும் பிரித்து அளவிட முடியாது. தற்போது நாட்டில் புதிய அரசியல் ஏற்பட்டுள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தேர்தல்களில் மக்கள் தமது மனச்சாட்சிக்கு ஏற்றப்படி வாக்களிக்கக் கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் சபாநாயகர் தெரிவித்தார்

நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தற்போதைய பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதீயாக கலந்து சிறப்பித்ததுடன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி, பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் இஸ்ஹாஜ், முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், பல்கலைகழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், கல்விமான்கள் உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.hisbulla-a karujeyasooriya-akarujeyasooriya-bhisbulla-bhisbulla-chisbulla-druby-a