பாரம்பரியம் குறித்து தமிழர்களாகிய நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும் – கோடீஸ்வரன்

0
349

கல்முனையில் தமிழர்களது கலை, கலாசாரங்களையும், அவர்களது விழுமியங்களையும் பாதுகாப்பதில் பலர் பல தடங்கல்களை  ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள் எனவே தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு கல்முனை சந்தாங்கேனி சிவனாலய வருடாந்த மகோட்சவத்தின் இறுதி நாளான தீர்த்தோட்சவ நாளன்று ஆலயத்திற்கு வருகைதந்து நிருவாகத்துடன் கலந்துரையாடி  ஆலயம் தொடர்பான குறைநிறைகளை நேரில் சென்று பார்வையிட்டு கேட்டறிந்து தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் கூறினார்..

இங்கு அவர் மேலும் கருத்து கூறுகையில்…

கல்முனையில் வாழ்கின்ற தமிழர்கள் சைவசித்தாந்தத்தையும், தமிழையும், அவர்களது கலை, கலாசாரங்களையும் பேணிப்பாதுக்காக்க முன்னின்று உழைக்கவேண்டும் இந்த விடயத்தில் அனைத்து தமிழர்களும் உறுதுணையாக இருந்து செயற்பட வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்து செய்வதில் இந்த ஆலயம் செயல்படுவதுடன் கல்முனை மாநகரில் தமிழர்கள் வாழ்கின்றார்கள் அதுவும் அவர்களது பண்பாடுகளையும், பாராம்பரியங்களை பின்பற்றி வாழ்ந்து வருகின்றார்கள் அத்தோடு இந்துக்களின் இருப்பை பிரதிபலிக்கின்ற பல செயற்பாடுகளையும் தொடர்ந்து செய்து வருகின்றார்கள் என்பதனை பறைசாற்றுகின்ற ஒரு ஆலயமாக இந்த ஆலயம் விளங்குகின்றது.

இந்த ஆலயத்தின் நிருவாகிகள், அங்கத்தவர்கள் அனைவரும் பெரும் பங்களிப்பினை ஆற்றி வருகின்றார்கள் அதனையிட்டு நான் அவர்களை பாராட்டுகின்றேன் அவர்களது செயற்பாடு மென்மேலும் தொடரவேண்டும் இந்த செயற்பாடு ஒட்டு மொத்த கல்முனை வாழ் தமிழர்களுக்கும் போய் சேர வேண்டும்.

ஆலயங்களின் அபிவிருத்தி பற்றி எப்படி சிந்திக்கின்றோமோ அது போன்று இந்த ஆலயங்களினூடாக கல்வியினை போதிக்கும் சிந்தனையை அனைவரிடத்திலும் வளரவேண்டும் கல்வியை எமது எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச்செல்லுகின்ற ஒரு இடமாக ஆலயம் மாறுகின்றபோது நிட்சயமாக இந்தப்பிரதேசத்தின் அபிவிருத்தி முன்னேற்றம் அடையும் எனவும் கூறினார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆலய பிரதம குருவினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.robin-a robin-bb robin-cc