வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் மாகாணசபைத்தேர்தல்

0
359

faizer-mustapha-aசிறிலங்காவில் விரைவில் நடக்கவுள்ள மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படியே நடத்தப்படும் என்று உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

வட மத்திய, கிழக்கு, சப்ரகமுவ மாகாணசபைகளின் பதவிக்காலம் வரும் செப்ரெம்பருடன் முடிவடையவுள்ளது..

இந்தநிலையிலேயே, இந்த மூன்று மாகாணசபைகளுக்குமான தேர்தல் தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படியே இடம்பெறும் என்று அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று மாகாணசபைகளுக்குமான தேர்தலை நாடாளுமன்ற வரவுசெலவுத் திட்டத்துக்கு முன்னர் நடத்தவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எண்ணியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

puthinapalakai