கல்முனை சந்தானேஸ்வரர் தேவஸ்த்தானத்தின் தேர்த்திருவிழா

0
262

கல்முனை மாநகரின் கண் வீற்றிருக்கும் சந்தானேஸ்வரர் தேவஸ்த்தான பிரமோட்சவ திருமுக விழாவின் சிறப்பு வாய்ந்த நிகழ்வான தேர்த்திருவிழா நிகழ்வானது இன்று அதிகாலை 3 மணியளவில் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி காலை 6 மணிளவில் ஆலயத்தில் இருந்து சிவன், பிள்ளையார், முருகப்பெருமானது தேர்கள் கல்முனை மாநகரை வலம் வந்தது..

ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் புடை சூழ மேள தாளங்கள், நாதஸ்வரங்கள் இசைக்க யாழ்ப்பாணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட காவடி, கரகாட்டங்களுடன் சந்தானேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. kalmunai-a kalmunai-b kalmunai-c kalmunai-d kalmunai-e kalmunai-f