பஸ் – மோட்டார்சைக்கிள் விபத்தில் கல்முனை தரவைப்பிள்ளையார்ஆலய செயலாளர் வரதராஜா பலி!

0
447
varatharaja-aகல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருதில் இடம்பெற்ற பஸ் – மோட்டார்சைக்கிள் விபத்தில் கல்முனை தரவை சித்தி விநாயகர் ஆலயம் மற்றும்  கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயங்களின் பரிபாலன சபையின் செயலாளர் அப்புக்குட்டி வரதராஜா அகால மரணமடைந்தார். 

 
கல்முனை 3ஆம் பிரிவைச்சேர்ந்த அ.வரதராஜாவிற்கு வயது 57 ஆகும்.இவர் ஒப்பந்தக்காரராகவும் சமுகசேவையாளராகவும் திகழ்ந்தவர்.அன்னாரது இழப்பு கல்முனையில் பெரும்சோகத்தை ஏங்படுத்தியுள்ளது.
 
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு சாய்ந்தருதில் இடம்பெற்றது. நேருக்குநேர் மோதி இடம்பெற்ற இவ்விபத்தில் கல்முனைப்பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.