வாழைச்சேனையில் “நிர்வாண எழுத்துக்கள்” கவிதை தொகுப்பு நூல் வெளியீடு 

0
532
Book Valaichenaiமட்டக்களப்பு வாழைச்சேனையில் முருகேசு தவராஜா நினைவு பணியகத்தின் வாழை வாணிகரனின் “நிர்வாண எழுத்துக்கள்” என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீடு இடம்பெற்றுள்ளது.

 வாழைச்சேனை இந்துக்கல்லூரி பாடசாலை மண்டபத்தில் இன்று(9) கல்லூரி முதல்வர் ஏ.ஜெயஜீவன் தலைமையில் இடம்பெற்ற இந்நூல் வெளியீட்டில் நூலாசிரியர் நல்லரெட்ணம் விஜிதரன் (வாழை வாணிகரன்) “நிர்வாண எழுத்துக்கள்” கவிதை தொகுப்பினை ஆக்கம் செய்திருந்தார்.
மேற்படி கவிதை தொகுப்பில் இனப்பற்று, மொழிப் பற்று, மற்றும் தாயகப்பற்றினை வெளிப்படுத்தி எழுதப்பட்டுள்ளதுடன் தமிழரின் பாரம்பரியம், வீரம் மற்றும் விழுமியங்கள் போன்றன வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவளை “விடியல், தமிழ் பெண் வாழ்த்து, மற்றும் விடிந்திடும் தமிழா எழுந்திரு மெதுவா” போன்ற இன அடையாளத்தை பறைசாற்றும் கவிதைகளும் உள்ளடக்கப்பட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் “நிர்வாண எழுத்துக்கள்” கவிதை தொகுப்பு முதல் பிரதியினை நூலாசிரியர் நல்லரெட்ணம் விஜிதரனின் பெற்றோர் தாழை செல்வநாயகம் அவர்களுக்கு வழங்கி வைத்தனர் அதனை தொடர்ந்து கெளரவ, சிறப்பு மற்றும் அழைப்பு விருந்தினர்களுக்கு பிரதிகள் வழங்கி வைக்கப் பட்டது.
இந்நிகழ்வில் கல்குடா வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி, ஆ.செல்வநாயகம் ( கலாபூசணம் தாழை செல்வநாயகம்), ஓய்வு நிலை உதவிக்கல்வி பணிப்பாளர் வ.சின்னத்தம்பி, மூத்த எழுத்தாளர் மூத்ததம்பி முத்துமாதவன், சிவஸ்ரீ மு.சண்முகம் குருக்கள், சிறப்பு விருந்தினர்கள், அழைப்பு விருந்தினர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் எனப் கலந்து கொண்டனர்.
முருகேசு தவராஜா நினைவு பணியகத்தின் முதல் நூல் வெளியீடு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.