புலம்பெயர் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் ஆதவில் கிராம அபிவிருத்தி 4ம் கட்டம்

0
566

DSC_1057புலம்பெயர் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் ஆதவில் கிராம அபிவிருத்தி என்ற தொனிப்பொருளிலான தாய்மாருக்கான உதவித்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
மண்முனை மேற்கு மகிழவெட்டுவான் கந்தப்போடி வித்தியாலயத்தில் இந் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வயக்கல்விப்பணிப்பாளர் செல்வி.க.அகிலா கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திகுமார், பிரதிக் கல்விப்பணிப்பாளர் க.ஹரிகரராஜ்,கோட்டக்கல்விப் பணிப்பாளர் ரி.சோமசுந்தரம், ஆகியோர் கலந்த கொண்டனர். அத்துடன், சுவிஸ் வாழ் திருமதி. சிவசாந்தி அமிர்தலிங்கம் மகன் அ.சுபிலகேசன், கிராம அபிவித்திச் சங்கத் தலைவர்கள் பாடசாலைகளின் அதிபர்களும், ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது கிராம அபிவிருத்தி உதவியின் நான்காம் கட்டமாக கிராமங்களில் உள்ள ஐந்து தாய்மார்களை இத் திட்டத்தில் உள்வாங்கியதுடன் இப்பிரதோசத்தில் 2016ல் க.பொ.த(சா.த) பரீட்சையில் தோற்றி உயர்தரத்திற்குத் தகுதியான 13 மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.
இவற்றுள் சிறந்த பெறுபோறுகளைப் பெற்ற மாணவர்களுக்குத் தலா ரூபா 10 ஆயிரமும் ஏனையோருக்குப் தலா ரூபா மூவாயிரமும் வழங்கிவைக்கப்பட்டன. இதற்கான நிதி திருமதி. ராதிகா திவாகரன்(சுவிஸ்) வழங்கப்பட்டது. மேலும் இப் பிதேசங்களில் எதிர்வரும் காலங்களில் 9ஏ சித்தி பெறும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலாரூபா 25,000.00மும் காத்தமுத்து யோகேந்திரன்(இத்தாலி) அனுசரணையுடன் வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.
அத்துடன் இக்கிராமங்களில் பாடசாலைகளில் தரம் 01ற்கு புதிதாக இணைந்து கொண்ட 65 மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக தலாரூபா 1,000.00மும்,பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன இதற்கான நிதி சாம் ஜெயக்குமார்(இலண்டன்) வழங்கியிருந்தார்.

DSC_1060
புலம்பெயர் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் ஆதவில் கிராம அபிவிருத்தி என்ற தலைப்பில் மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள நரிப்புல்லுத்தோட்டம் , மகிழவட்டவான், நெல்லூர் மற்றும் மணிபுரம் ஆகிய கிராம அபிவிருத்திச் சங்கங்கங்களினூடாக, மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் மூடப்படும் நிலையில் உள்ள பாடசாலையின் நிலைமை கருதி பிரதேச தமிழ் மக்களின் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்கில் முதல் கட்டமாக நரிப்புல்லுத்தோட்டம், மகிழவட்டவான் கிராமங்களில் 2016ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறுவர் தினத்தை முன்னிட்டு 2வது குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த 13 தாய்மார்களுக்கு தலா ரூபா 10,000.00 வும் பிள்ளை பராமரிப்பிற்காக 18 வயது வரை மாதம் தோறும் தலா ரூபா 1,000.00 வும் வழங்கிவைக்கப்பட்டது. இதனை சுவிஸ் வாழ் செ.அமிர்தலிங்கம் கன்னி முயற்சியாக ஆரம்பித்துவைத்தார்.

DSC_1072 DSC_1075 DSC_1082 DSC_1064 DSC_1065