முனைக்காட்டில் ஆரையம்பதி வாசியின் சடலம்.

0
2990

கொக்கட்டிச்சோலை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு மேற்கு வயல் பகுதியில் இருந்து ஆரையம்பதி ஐ சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்தந்தையான 40 வயதையுடைய முத்துலிங்கம் இராமச்சந்திரன் என்பவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

. காத்தான்குடி வடக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பிரேதத்தை பார்வையிட்டதுடன் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு கொக்கட்டிச்சோலைபொலீசாருக்கு அனுமதி வழங்கியள்ளார்.

குறிப்பிட்ட நார் சிறைத்தண்டனை பெற்று அண்மையில் விடுதலையாகிய நபர் என ஆரையம்பதி தகவல்கள் தெரிவிக:கின்றன. அத்துடன் இவருடைய நெருங்கிய உறவினர் ஒருவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறிப்பிட்ட நபர் மனைவியை விவாகரத்து செய்து தனிமையில் வாழ்ந்து வந்தவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை. பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.body-a body-b body-c body-d body-e