சுவிஸ் சூறிச் மாநிலத்தில் நடைபெற்ற தமிழ் மாணவர்களுக்கான பரிட்சைகள்

0
790

சுவிஸ் தமிழர் நட்புறவுச்சங்கம் சூறிச்   தமிழ் மாணவர்களை மையப்படுத்தி அவர்களின் திறன்களை வளப்படுத்தும் நோக்கில் நடாத்திய 2017ம் ஆண்டுக்கான

பரிட்சைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(09.04.2017) சூறிச் சிலிறன் எனுமிடத்தில் காலை 9மணி தொடக்கம் பிற்பகல் 16.00மணிவரை நடைபெற்றது.

ஆண்டு தோறும் நடாத்தப்படும் இப்பரிட்சையில் தமிழ்,கணிதம், டொச் மொழி, ஆங்கிலம்,பிரஞ் ஆகிய பாடங்களுக்கு தமிழ் மாணவர்கள் தோற்றினர்.

குறிப்பிட்ட பரிட்சைகளில் 640மாணவர்கள் பங்குபற்றியதாக அமைப்பின் தலைவர் க. சற்குணமோகன் தெரிவித்தார்.

சுவிஸ் தமிழர் நட்புறவுச்சங்கம் சூறிச் அமைப்பினர் சூறிச்மாநிலத்தில் தமிழர்களின்நனல் கருதி பல்வேறு செயற்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்..zürich-a zürich-b zürich-c zürich-d zürich-e zürich-f zürich-g zürich-h zürich-i zürich-j zürich-k zürich-l zürich-m