மட்டு சமுர்த்தி திணைக்கள ஏற்பாட்டில் சமுர்த்தி அபிமானி விற்பனைக் கண்காட்சி

0
496

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி அபிமானி விற்பனைக் கண்காட்சி  மட்டக்களப்பு நாவற்குடாவில் சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் பி.குணரெட்ணம் தலைமையில் இன்று 8ஆம் திகதி காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. .

 சமுர்த்தி திணைக்களத்தினால் கடந்த வருடங்களில் நடாத்தப்பட்டுவந்த இவ் விற்பனைக் கண்காட்சி இவ் வருடமும் சமுர்த்தி பயனாளிகளைக் கொண்டு நடாத்தப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் நாயகமுமான  திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேலும் நின் நிகழ்வில் சமுர்த்தி திணைக்களத்தின் குறுநிதிய பிரிவு பணிப்பாளர் எம்.ஐ.வகாப்தீன், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெறும் விற்பனைக் கண்காட்சியின்  போது, சமுர்த்தி வாழ்வாதார திட்டத்தின் மூலம் தமது சுய தொழிலை மேற்கொண்டுவரும் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது.
இதன்போது கடந்த வருடத்தில் தெரிவான சிறந்த தொழில் முயற்சியாளர்களுக்கு அரசஅதிபரால் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சங்க உறுப்பினர்கள் பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.charls-a charles-b charles-c