கல்வியை பௌதீக வளங்களை மாத்திரம் கொண்டு கட்டியெழுப்ப முடியாது – ஷிப்லி பாறூக்

0
572
sifly farook-a hisbulla-aஇப்பாடசாலையினுடைய அபிவிருத்தி தொடர்பாக நாங்கள் பல்வேறுபட்ட விடயங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம். அதனடிப்படையில் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டிலிருந்து சுமார் 1 கோடி 10 இலட்சம் ரூபாய் செலவில் மூன்று மாடிக் கட்டடத்திற்கான நிர்மானப்ப்பனிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்பாடசாலைக்கு தேவையான ஏனைய அனைத்து வளங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  ஷிப்லி பாறுக் தெரிவித்தார்..

மட்/காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தினுடைய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 2017.04.07ஆந்திகதி-வெள்ளிக்கிழமை காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் அதிபர் A.C. ஆதம் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் 
இருப்பினும் மாணவர்களின் கல்வியினை வெறுமெனே பௌதீக வளங்களை மாத்திரம் கொண்டு கட்டியெழுப்ப முடியாது. மாறாக மாணவர்களின் கல்வியினை மேம்படுத்துவது தொடர்பாக ஒவ்வொரு பெற்றோர்களும் மற்றும் ஆசிரியர்களும் கூடிய அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
இப்பாடசாலை கடந்த காலங்களில் சிறந்த கல்வித்தரத்தினை கொண்டிருந்த போதிலும் அண்மைக்காலமாக இப்பாடசாலை மாணவர்களின் பெறுபேறுகள் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளதோடு இப்பாடசாலைக்கான மாணவர் சேர்வு வீதமும் மிகவும் குறைவடைந்து காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த 2016ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் இப்பாடசாலையிலிருந்து 3 மாணவர்கள் மாத்திரமே சித்தியடைந்திருந்தனர். வெறுமெனே 390 மாணவர்கள் மாத்திரமே தற்போது இப்பாடசாலையில் கல்வி கற்கின்றனர்.
எனவே இப்படசாலையினுடைய கவித்தரத்தினை மேம்படுத்துவதன் மூலம் இப்பிரதேசத்திலுள்ள சிறந்த பாடசாலைகளுள் ஒன்றாக இப்படசாலையினை கட்டியெழுப்ப வேண்டிய ஒரு தேவைப்பாடு காணப்படுகின்றது. அதற்காக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் மிகவும் அர்பணிப்போடு செயற்பட வேண்டும் என தனது உரையில் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புழ்ழாஹ் அவர்களும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாணச பை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் A.S. இஸ்ஸதீன் அவர்களும் கலந்துகொண்டதோடு, விளையாட்டுப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசில்களும் வெற்றிக்கின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.