ஓட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பராமரிக்கும் தீரனியம் பயிற்சிப் பாடசாலை

0
766
எஸ். பாக்கியநாதன்
ஓட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பராமரிக்கும் தீரனியம் பயிற்சிப் பாடசாலை மட்டக்களப்பு கோவிந்தன் வீதியின் அமைந்துள்ள அருட்சகோதரர்களின் தருமஸ்தானத்தில் இன்று சனிக்கிழமை (08) திறந்து வைக்கப்பட்டது..
ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜியத்தின் சர்வதேச வைத்திய சுகாதார நிறுவனத்தின் அனுசரணையில் ரூபாய் 3 மில்லின் செலவில் அமைக்கப்பட்ட தீரனியம் பாடசாலையின் திறப்பு விழா
மாவடிவேம்பு உளநலப்பிரிவு வைத்திய சாலையின் பொறுப்பாளர் வைத்தியக்கலாநிதி யூடி ரமேஷின் தலைமையில் நடைபெற்றது.
இலங்கை அருட்சகோதரர்களின் தரும ஸ்தாபனத்தின் மாகாண மற்றும் பிராந்திய மேலாளர் அருட்சகோதரர் பேக்ரட் கொட்பிரட், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா, மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ணமிசன் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தா மற்றும் புளியந்தீவு மெதடிஸ் தேவாலயத்தின் பங்குத் தந்தை அருட்திரு ஜே.டபிள்யு. யோகராஜா ஆகியோர் திறந்து வைத்து ஆசீர்வதித்தனர்.
இந்நிகழ்வில்; பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியக்கலாநிதி ஜே.எம்.டபிள்யு. ஜெயசுந்தர பண்டாரவிடம் குறித்த பாடசாலையின் தேவைகள் அடங்கிய கடிதம் கையளிக்கப்பட்டதோடு அவரினால் ஓட்டிசம் சிறுவனின் முதல் அனுமதியை பதிவீடு செய்தார்.theeraniyam-a theeraniyam-b theeraniyam-c theeraniyam-d