சரியாகச் செயற்பட்டால் கிழக்ககில் 13 உறுப்பினர்களை தெரிவு செய்ய முடியும் – துரைராசசிங்கம்

0
624

பிள்ளை தவழ்வதற்கு முன்பே மீசை முளைக்க வேண்டும் எனப் பலர் நினைக்கின்றார்கள்

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம்

உண்மையில் அரச நிர்வாகம் என்கின்ற விடயத்தில் நாங்கள் இப்போது குழந்தைப் பருவத்தில் தான் இருக்கின்றோம். அதனை பலர்  மறந்து விட்டு தற்போது மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பொறுப்பை எடுத்து விட்டது என்றதுமே பிள்ளை தவழவும் தேவையில்லை, வளரவும் தேவையில்லை உடனே மீசை முளைத்து விட வேண்டும் எனப் பலர் நினைக்கின்றார்கள் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்..

கி;ழக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் ஒதுக்கீட்டின் கீழ் நாவற்குடா வாவி மீனவர் கூட்டுறவுச் சங்கத்திற்கு மின்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை, பிரதேச பிரமுகர்கள், மீன்பிடிச் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

மாகாணசபைகள் உருவாக்கப்பட்ட போது மாகாண சபைக்குத்தான் மீன்பிடி சம்மந்தமான விடயங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இதனை மீன்பிடி கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒரு அமைப்பாக ஒருங்கமைத்துள்ளோம். ஆனால் கடந்தகால அரசு இந்த மீன்பிடியை மத்திய அரசிற்குள் உள்வாங்கி கிராமிய மீனவர் அமைப்பு என்று உருவாக்கி அதனை இரண்டாகப் பிரித்து விட்டார்கள். இரண்டிலும் ஒரே அங்கத்தவர்கள் தான் இருப்பர்கள் ஆனல் இரண்டு பெயராக இருக்கின்றது. இது சம்மந்தமாக மத்திய அமைச்சருடன் இடம்பெற்ற கூட்டங்களில் நான் அமைச்சரிடம் இது பற்றி தெரிவித்துள்ளேன்.

எமது கிழக்கு மாகாணத்தைப் பொருத்த மட்டில் இந்த இரண்டு சங்கங்களும் ஒன்றாகத்தான் இயங்கவேண்டும் என்கின்ற விடயத்திற்கு மத்திய அமைச்சர் உடன்பட்டிருக்கின்றர்;. ஆனல் அதிகாரிகளுக்கிடையில் தான் சிறு இடைவெளி காணப்படுகின்து.

எமது சமுதாயத்தைப் பொருத்தவரையில் எப்போதும் பிரச்சினைகக்கு உட்பட்டவர்களாகவே இருக்கின்றோம். எமது உரிமைகளை கேட்டதன்  காரணமாக  நாங்கள்  அதிகமன கஷ்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வந்;தது. அதிலும் இந்த 30 ஆண்டு காலத்திற்குள் மிகவும் பாரிய துன்ப துயரத்திற்குள்ளே நாங்கள் ஆளாகிவிட்டோம்.

இந்த முப்பது ஆண்டுகள் நங்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்த அதே நேரரத்தில் அந்த முப்பது ஆண்டுகளும் எமது சகோதரர்கள் வளர்ந்து விட்டார்கள். அதனை பலர்  மறந்து விட்டு தற்போது மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பொறுப்பை எடுத்து விட்டது என்றதுமே பிள்ளை தவழவும் தேவையில்லை, வளரவும் தேவையில்லை உடனே மீசை முளைத்து விட வேண்டும் எனப் பலர் நினைக்கின்றார்கள்.

உண்மையில் அரச நிர்வாகம் என்கின்ற விடயத்தில் நாங்கள் இப்போது குழந்தைப் பருவத்தில் தான் இருக்கின்றோம். எமது சகோதர்கள் முப்பது வருடம் பெற்றிட்ட விடயங்களை நாங்கள் இந்த இரண்டு வருத்தில் எடுப்பதென்பது மிகவும் இயலாத காரியம்.

யுத்தம் முடிவுற்றதும் இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  இனங்களின் அபிவித்திக்காக உலக நாடுகள் ஏராளமான நிதியைக் கொடுத்தது. ஆனால் அந்த நிதிகளையெல்லாம் அன்றைய அரசாங்கம் அந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தாமல் வெவ்வேறு விதமாகப் பயன்படுத்திக் கொண்டது.  அதே நேரத்தில் அவர்களினுடைய செல்லப்பிள்ளைகளாக இருந்தவர்களும் அந்த சொத்துகள் சுதந்திரங்களை யெல்லாம் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

அப்போது பாரிய மழை பெய்த காலம் இப்போது மழையெல்லாம் விட்டு தூவானம் அடிக்கின்ற காலத்தில் தான் நாங்கள் பொறுப்பேற்றிருக்கின்றோம். எங்களுக்குரிய நிதி ஒதுக்கீடுகள் எல்லாம் மிகக் குறைவு. எனினும் நாங்கள் மத்திய அரசாங்கத்துடன் பேசியிருக்கின்றோம் மத்திய அமைச்சருடன் ஒரு இணக்கப்பாட்டுடன் இருக்கின்றோம் அதை வைத்துக் கொண்டு மத்திய அமைச்சின் மூலம் பெறக் கூடிய பலாபலன்களையும் பெற்று எமது மக்களுக்கு உதவிகள் செய்வோம்.

இந்த நிலையில் நாம் எமது புத்திசாலித் தனங்களைப் பயன்படுத்த வேண்டும். அதை விடுத்து வெறுமனே துவேசம் பேசத் தொடங்கினால் மீண்டும் அதே இடத்திற்கே போய்விடுவோம். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எமக்கு இருக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

நாங்கள் அரசாங்கத்திற்கு சொல்லுகின்ற போது வடக்கு கிழக்கு மாகாணங்களை முப்பது ஆண்டுகளுக்கு பிற்பட்ட மாகாணங்கள் என்கின்ற ரீதியில் வசதிகளை இன்னும் கூடுதலாகத் தர வேண்டும். அப்படி வசதிகள் கூடுதலாகத் தரப்பட்டாலும் ஏற்கனவே அனுபவித்தவர்களுக்குத் தான் அந்த வசதிகள் கூடுதலாகச் செல்லும் வாய்ப்பும் இருக்கின்றது. இவ்வாறு பலவாறு சிந்தித்துச் செயற்பட வேண்டியும் இருக்கின்றது.

கடந்த மாகாணசபைத் தேர்தலில்  நாங்கள் கவனமாகச் செயற்பட்டிருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு உறுப்பினர்களைத் தெரிவு செய்திருக்கலாம். ஆனால் எமது கவனயீனத்தினால் ஆறு உறுப்பினர்களை மாத்திரமே தெரிவு செய்ய முடிந்தது.  சரியான முறையில் செயற்பட்டால் கிழக்கு மாகாணத்தில் 13 உறுப்பினர்களை நாங்கள் தெரிவு செய்ய முடியும். அத்தோடு இரண்டு போனஸ் ஆசனத்துடன் 15 உறுப்பினர்கள் நாங்கள் வந்து விடுவோம். அதன் பிறகு இன்னும் நான்கு உறுப்பினர்கள் தான் தேவைப்படும் எமக்கு அரசாங்கம் அமைப்பதற்கு. இது தொடர்பில் மக்கள் கவனமாகச் செயற்பட வேண்டும்.

இனிவருகின்ற தேர்தல்களிலாவது மக்கள் இந்த விடயங்கள் பற்றி சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழர்களை விட்டு விட்டு ஆட்சியமைக்க முடியாது என்கின்ற யோசனையை மற்றவர்களுக்கு ஏற்படுத்தக் கூடிய விதத்தில் எமது மக்களின் செயற்பாடு இடம்பெறுமாயின் நிச்சயமாக கிழக்கு மாகாணத்திலே தமிழர்களோடு சேர்ந்து தான் வழ வேண்டும் என்கின்ற ஞானோதயத்தை ஏற்படுத்தலாம். அதன் மூலம் நாங்கள் ஒற்றுமையைக் கட்டியெழுப்பலாம்.

முன்பெல்லாம் இலங்கைத் தமழரசுக் கட்சியில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள் ஆனால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றதும் அரசாங்கத்துடன் சேர்ந்து விடுவார்கள். இதன் போது எமது தலைவர் அவர்கள் மிகவும் நுனுக்கமாகச் சென்னார்கள் அது அவர்களின் பிழை அல்ல நமக்கு சமஷ்டி கிடைத்திருந்தால் முஸ்லீம்கள் நம்மை விட்டுப் பிரிந்திருக்க மாட்டார்கள் ஏனெனில் அதிகாரம் என்ற ஒன்று வருகின்ற போது அவர்கள் எங்களோடு கட்டாயம் நிற்பார்கள்.

எனவே இனிமேல் வருகின்ற இந்த அரசியலமைப்பு விடயங்களில் அதிகாரத்தை நாங்கள் பெறக் கூடிய நிலைமை வருகின்ற போது முஸ்லீம் சகோதரர்களும் எங்களோடு சேர்ந்து இருந்து தங்களுடைய விடயங்களைக் கையாளுவதற்கு முயற்சிப்பார்கள். அவ்வாறு சேர்ந்து ஒரு இணக்கப்பாட்டுக்குள் வருகின்ற போது இவ்வாறான வன்மம் எல்லாம் போய்விடும். நாங்கள் பழைய விடயங்களை மாத்திரம் வைத்துக் கொண்டிருந்தால் அதற்கு அப்பால் செல்ல முடியாமல் இருக்கும்.

எனவே இனிவருகின்ற காலத்தில் எமது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். ஒரே ஒரு அணியை மாத்திரம் தான் தெரிவு செய்ய வேண்டும் அவ்வாறு தெரிவு செய்யப்படுகின்ற ஒரு அணிக்கு 15 உறுப்பினர்கள் வருவார்கள் என்றால் இன்னும் எமக்குப் பலம் கூடும். ஏமக்கு இந்த மாகாணசபையில் கூடுதலான அதிகாரங்களைக் கையாளக் கூடிய ஒரு நிலைமை வரும் என்றால் எமது மக்களின் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்தார்.thurai-aa thurai-b thurai-cc