செங்கலடி பிரதேச சபையின் அசமந்தபோக்கு பாழடைந்த கிணறுகள் யாருக்குசொந்தம்

0
580

chenkalady-a chenkalady-b chenkalady-c chenkalady-d chenkalady-e

 

கடந்த பல வருடங்களுக்கு முன் உயிர் கொல்லி நோயாக இருந்த மலேரியாவைத் தொடர்ந்து தற்பொழுது டெங்கு நோய் உயிர் கொல்லியாக மாறியிருக்கின்ற நிலையில் அரச நிருவாக கட்டிடங்களில் காணப்படும் பல கிணறுகள் பாழடைந்த நிலையில் டெங்கு ஆபாயத்துக்கும் உள்ளதாகியிருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்..
செங்கலடி பிரதேச சபைக்குப்பட்ட சித்தாண்டி பொதுச் சந்தையிலுள்ள கிணறுகள் பல காலமாக பாழடைந்த நிலையில் டெங்கு நுளம்புக்குரிய வாழ்விடமாக காணப்படுகின்றமையினால் பொதுச் சந்தை கட்டிடத்தை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் பெரும் அச்சத்திலுள்ளதாக தெரியவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குத் தாக்கத்தின் எண்ணிக்கையை கணக்கிடும் அதிகாரிகள், அதற்குரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை வீடு பூராகவும் இடம்பெறச் செய்கின்றவேளையில் இவ்வாறு பாழடைந்து கிடக்கும் அரச நிருவாக கட்டிடங்களின் நிலைமைகளை கவனிப்பது மிக மிக குறைவாகவுள்ளதாக தெரியவருகின்றது.
வீடு வீடாக சென்று டெங்கு உள்ள இடங்களை கண்டு உரிய சட்ட நடவடிக்கை மற்றும் டெங்கு அபாய பிரதேசமென இனம் காணும் சித்தாண்டி மற்றும் ஏனைய பொது சுகாதார பரிசோதகர்கள் இவ்வாறு பிரதேச சபை கட்டிடத்தில் பாழடைந்த கிணறுகளின் நிலவரங்கள் தெரியவில்லையா அல்லது கண்டும் காணாதுபோல் இடம்பெறுகின்றதா என்பது கேள்விக்குரியாகவே உள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை குறித்த சித்தாண்டி பொதுச் சந்தையில் வியாழக்கிழமைகளில் வியாபார நடவடிக்கை இடம்பெற்றாலும் வெள்ளிக்கிழமை துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
சித்தாண்டி பொதுச் சந்தை முன்னாள் முதலமைச்சராக இருந்த சி.சந்திரகாந்தனினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டிருந்தாலும் வியாபார நடவடிக்கைக்காக பல மாவட்டங்களில் இருந்துவரும் வியாபாரிகள் குடிப்பதற்கு தண்ணீர் முறைமையில்லை, ஒழுங்கான மலசலகூட வசதியில்லை ஒரு மின் விளக்குகூட பொருத்தப்படவில்லை இவ்வாறு பல குறைபாடுகள் தொடர்பாக அண்மைக் காலமாக நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் பிரதேச சபைக்குத் தெரியப்படுத்தியும் இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கையும் இடம்பெறவில்லையென தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.