மட்டக்களப்பு படுவான்கரையில் குடும்பஸ்தர் பரிதாப மரணம்.

0
6221

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை இரும்பண்டகுளப்பகுதியில்

இரண்டு  குழந்தைகளின் தந்தை பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று (07.04)இடம் பெற்றுள்ளது..

மரணமடைந்தவர் பட்டிப்பளையைச் சேர்ந்த 41 வயதுடைய சின்னத்தம்பி கணேசமூர்த்தி என கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் பற்றித்தெரியவருவதாவது இரும்பண்ட குளத்திலிருந்து வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக நீர் நிறைந்த துரிசுக் கிணற்றினுள் இறங்கி கீழ் இருந்த கற்களை அகற்றிக் கொண்டிருந்த வேளை துரிசுக் கதவு விழுந்ததன் காரணமாக மரணமடைந்துள்ளார்.

. திடீர் மரண விசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பிரேதத்தை பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு கொக்கட்டிச்சோலைபொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.body-aa bell-a ganesathas-a police-a