கல்முனை சந்தானேஸ்வரர் தேவஸ்த்தானத்தின் பிரமோட்சவ திருவிழாவின் திருவிளக்கு பூஜை வழிபாடுகள்

0
623

kovil-a kovil-b kovil-c kovil-d

கல்முனை மாநகரின் கண் வீற்றிருக்கும் கௌரி அம்பிகை உடனுறை சந்தானேஸ்வரர் தேவஸ்த்தான பிரமோட்சவ திருமுக விழாவின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான திருவிளக்கு பூஜை வழிபாடானது நேற்று ஆலயத்திலே மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது..

திருவிளக்கு பூசையில் திருமணமாகாத கன்னிப்பெண்களும், திருமணமான சுமங்கலிமாரும் தங்களது கணவனுக்காக வேண்டி வழிபடப்படும் வழிபாடாக இவ்வழிபாடு இடம்பெறுகின்றது.

30.03.2017 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 10.04.2017 ஆம் திகதி தீர்த்தோட்சவத்துடன் முடிவடைகின்றது.

8 ஆம் திகதி சப்பறத்திருவிழாவும், 9 ஆம் திகதி ஞாயிற்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு விநாயகர் வழிபாட்டோடு ஆரம்பமாகி காலை 6 மணிக்கு சந்தானேஸ்வர பெருமான் தேரினிலே கல்முனை மாநகரை வலம்வர இருக்கின்றார் அதனைத்தொடர்ந்து மறுநாள் திங்கட்கிழமை தீர்த்தோட்சவத்துடன் இவ்வாண்டிற்கான திருவிழா நிகழ்வுகள் இனிதே முடிவடைகின்றது.

மகோட்சவ பிரதம குரு சிவாகம சேகரர் கிரியா பாவனா பிரம்மஸ்ரீ சோமசசிதரக்குருக்கள், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிறிராமச்சந்திர தவசீலன் ஆகியோரும் 12 நாட்களும் அன்னதானம் வழங்கப்படுவதுடன் தெய்வீக பேருரைகளும் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஆர்.தில்லைநாயகம்