சுன்னாகத்தில் பெரும் சோகம் மின்சாரம் தாக்கி கணவன் – மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்

0
612

body-aயாழ்ப்பாணம், சுன்னாகம் ஐயனார் கோவில் பகுதியிலுள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கியதில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்..

அப்பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தையொட்டி, நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு வீட்டில்

இறைவனுக்கு சோடனை செய்வதற்காக லைட் அலங்காரம் செய்ய முற்பட்ட கணவன் கம்பியினை மீர்டர் boxil ஆணி அடித்து கட்டும் போது மின்சாரம் தாக்கியதாகவும் கணவனை காப்பாற்றும் முயற்சியில் மனைவி மாலை கட்டியிருந்தபடியே கணவனை பிடிக்க கம்பியையும் பிடித்தால் போல இந்த அவலம் நடந்துள்ளதாக தெரிகின்றது.

.இன்று சனிக்கிழமை (08) காலை, உறவினர்கள் அவ்வீட்டுக்குச் சென்றபோதே சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை, சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.