தமிழ் நபருக்கு சொந்தமான 03 இலட்சம் பணத்தை அவரிடமே ஒப்படைத்த முஸ்லிம் சகோதரர்

0
809

help-aவவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தவர் வெயில் காரணமாக மயக்க முற்று விழுந்த நிலையில் அவரின் பயணப்பொதியிலிருந்த 03 இலட்சத்தி 07ஆயிரம் ரூபாய் பணம் இன்று (07) பிற்பகல் 3.00மணியளவில் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்..

திருகோணமலை, உட்துறைமுக வீதியைச்சேர்ந்த முத்து தம்பி விக்ன ராஷா (49வயது) என்பவரே மயக்க முற்றவர் என தெரியவருகின்றது.

குறித்த நபர் ஹொறவப்பொத்தான-ரத்மலை பகுதியைச்சேர்ந்த எம்.சாரிப் என்பவரின் வீட்டுக்கு முன்னாள் மயக்கமுற்று விழுந்து கிடந்த வேளை அவரின் பயணப்பொதியில் 3இலச்சத்தி 07ஆயிரம் ரூபாய் பணமும் தங்க ஆபரணமும் கைப்பற்றப்பட்டு அவரது மனைவி பிள்ளைகள் மற்றும் உறவினர்களிடம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைத்து ஒப்படைத்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றவர் மயக்க முற்ற போது அவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ளமையினால் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

thanks

ABDUL SALAM YASEEM – TRINCO