கிழக்கு வலய ஒருங்கிணைந்த அபிவிருத்தித்திட்டத் தயாரிப்புக்கான பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்

0
672

க.விஜயரெத்தினம்

கிழக்குப் பிரதேசத்துக்கான ஒருங்கிணைந்த அபிவிருத்தித்திட்டம் தயாரித்தலுக்கான பங்குதாரர்களுடனான முதல்கட்ட கலந்துரையாடல் நேற்று வியாக்கிழக்கிழமை (06) பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது..
தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் எதிர்வரும் 20ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள இலங்கையின் அபிவிருத்திக்கான நான்கு வலயத்திட்டத்தில் கிழக்கு வலயத்திற்கான ஆய்வுக்கலந்துரையாடலே இதுவாகும்.
இத்திட்டத்தினைத் தயாரிக்கும் பொறுப்பினை ஏற்றுள்ள மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நகர மற்றும் கிராமியத்திட்டமிடல் பீடத்தினால் இந்தக்கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதில் இப்பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் சானக்க காரியவசம், விரிவுரையாளர் ஷாலினி மரியதாஸ்  ஆகியோர் பங்கு கொண்டனர். மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்கள், கிழக்குப் பல்கலைக்கழக துறைசார் சிரேஸ்ட விரிவுரையாளர்கள் பங்கு கொண்டனர்.
இத்திட்டத் தயாரிப்பினை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நகர மற்றும் கிராமியத்திட்டமிடல் பீடத்தின் விரிவுரையார்களின் வழிகாட்டலில் 3ஆம் வருட மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், விவசாயம், மீன்பிடி, நீர்வழங்கல், நீர்ப்பாசனம், வீதி அபிவிருத்தி, நகர அபிவிருத்தி அதிகாரசபை, கரையோரம்பேணல், வனவளம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலில் துறைசார் மேம்பாடுகள், தேவைப்பாடுகள், தற்போதைய நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. திட்டம் தயாரிப்பிலிருந்து இத்திட்டம் 2017 முதல் 2050ஆம் ஆண்டுவரையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதில், பொருளாதார அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, சுற்றாடல் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத்துறை, வர்த்தக மற்றும் வியாபரம், கல்வி எனப் பல்வேறுபட்ட பிரிவுகளிலும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த ஆரம்பக்கட்ட ஆராய்வுகள் மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டு அடுத்து அமைச்சுமட்ட கலந்துரையாடல்கள், தொழில்நுட்பக்குழு ஆராய்வு மற்றும் செயற்திட்ட பூரணப்படுத்தல்களையடுத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்கள் ஒரு வலயமாகவும், கொழும்பு திருகோணமலை ஒரு வலயமாகவும், காலி – ஹம்பாந்தோட்டை ஒரு வலயமாகவும் அம்பாறை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் மற்றொரு வலயமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் முதல் கட்டமே கிழக்குபபிரதேசத்துக்கான ஒருங்கிணைந்த அபிவிருத்தித்திட்டம் தயாரித்தலாகும்.
க.விஜயரெத்தினம்batti-cc batti-dd batti-ee