புதுக்குடியிருப்பு காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி கண்டுபிடிப்பு

0
220

arack-aமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு அரச காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யப்பட்ட இடம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம்(6) முல்லைத்தீவு மாவட்ட சட்டவிரோத மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பொறுப்பதிகாரி எம்.உதயானந்தன் குழுவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்றனர்.

இதன் போது குறித்த காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக நடைபெற்று வந்த கசிப்பு உற்பத்தி கண்டுபிடிக்கப்பட்டதுடன் அங்கிருந்து 60 லீட்டர் கசிப்பு, ஒரு இலட்சத்து எண்பதினாயிரம்(180000) கோடா உள்ளிட்ட முக்கிய பொருட்கள் அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது.,

இந்நிலையில் குறித்த கசிப்பு உற்பத்தியை மேற்கொண்ட வந்தவர் என நம்பப்படும் 52 வயதுடைய புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.