ரணவிரு நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் புத்தாண்டு விளையாட்டுவிழா

0
236
தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகமும் ரணவிரு நலன்புரி அமைப்பும் இணைந்து பொலிஸ் மற்றும் பாதுகாப்புப்படையினரின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழாவும் கலை நிழ்ச்சியும் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் தங்களது வைத்தியப்பரிசோதனை அறிக்கைகளுடய் விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்து தங்களது பிரதேச பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கவேண்டும் என்றும் அறறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 0777009519, 0718565332 என்ற மட்டக்களப்பு மாவட்ட ரணவிரு சங்கத் தலைவருடனும் தொடர்பு கொள்ள முடியும்.
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி காலை 7 மணிமுதல் இவ்விழா நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆரம்ப நிகழ்வுகள் காலை 9 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரம சிங்க, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அதிகாரிகள், உள்ளிட்ட பலரும் பங்குபெற நடைபெறவுள்ளது.
இவ்விளையாட்டு விழாவின் நிகழ்வுகளாக காலை 7 மணிக்கு ஆண் பெண் சைக்கிள் ஓட்டப்போட்டி, ஆண்பெண் மரதன் ஓட்டப்போட்டிகள் நடைபெறும். பகல் 2 மணிமுதல் அழகு ராஜா, ராணிப் போட்டி,  தலையணைச் சமர், வழுக்கு மரம் ஏறுதல், ரபான் அடித்தல், ஓலை மட்டை இளைத்தல், முட்டி உழைத்தல், மர்ம மனிதனைக்கண்டுபிடித்தல், கையிறு இழுத்தல் என்பன நடைபெறுகின்றன.
அத்துடன், யானைக்கு கண்வைத்தல், முட்டை உழைத்தல், பப்பாசிப்பழத்தின் விதை எண்ணுதல், தடை தாண்டி ஓடுதல், சங்கீதக்கதிரை ஆகியனவும் இடம்பெறும்.
அதே நேரம் சிறுவர்களுக்கான விளையாட்டுக்களான போத்தலில் தண்ணீர் நிரப்புதல், கரண்டியில் தேசிக்காய் கொண்டு ஓடுதல், பலூண் ஊதுதல், சிறுவர் அழகு ராஜா ராணிப் போட்டி, மிட்டாய் பொறுக்குதல் ஆகியனவும் இடம்பெறவுள்ளன.