அடிப்படைப்பிரச்சினைகளை அரசு தீர்க்க வேண்டும் மன்னிப்புச் சபையிடம்: வடக்கு முதல்வர் விக்கி

0
390
காணி விடுவிப்பு, காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகளில் விடுதலை போன்ற தமிழ் மக்களின் அத்தியவசிய பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேசம் தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுக்க கொடுக்க வேண்டும்.

 

இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுப்பதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கான நன்மை கிடைக்கும் என்றும் வடமாகாண முதலமைச்சர் சர்வதேச மன்னிப்புச் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று வருகை தந்த சர்வதேச மன்னிப்புச் சபையினர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை யாழ்.கோவில் வீதியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் உத்தியோக வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இக் கலந்துரையாடலின் போதே சர்வதேச மன்னிப்பு சபையின் பொது செயலாளர் சார்லி இலங்கைக்கான நிபுணர் ஒலன்டா போஸ்டரிடம் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:-
தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரியும், காணாமல் போனது சம்மந்தமாக ஆர்ப்பாட்டங்களை செய்து கொண்டிருப்பதையும், வௌ;வேறு பிரச்சினைகள் தொடர்பில் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கும் மக்களை அவர்களுடைய வீடுகள் வரை சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.
உங்களுடைய பிள்ளைகள் காணாமல் போன போது, எவ்வாறான சூழ்நிலை இருந்தது நடவடிக்கை இது வரையில் எடுக்கப்பட்டுள்ளதா, என்பது தொடர்பாக கேட்டறிந்து அதனை குறிப்பெடுத்து வைத்துள்ளார்கள்.
இவர்கள் தகவல் அறியும் ஸ்தாபனம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும், செயற்பாடுகளை உலகம் முழுவதும் முன்னெடுத்து வருகின்றார்கள்.
இதன் படிதான் இங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக முழுமையாக அறிந்து வைத்துக் கொண்டு தான் என்னையும் சந்திக்க வந்தார்கள்.
மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக எங்களுடைய அவதானங்களையும் கேட்டறிந்து கொண்டார்கள்
நானும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கூறிய போது, தாம் மக்களிடம் சென்ற கேட்ட போதும் இதனையே சொன்னார்கள் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.
எங்களால் இயலுமான வரை பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு தெரிவித்துக் கொண்டு தான் இருக்கின்றோம். அப் பிரச்சினைகளுக்கான எந்த நிவாரணங்களும் இதுவரை கிடைக்கவில்லை.
வெளிநாட்டு அரசாங்ககங்களும், மன்னிப்புச் சபை போன்ற நிறுவனங்களும் இலங்கை அரசாங்கத்திற்கு போதிய அழுத்தங்களை கொடுக்க வேண்டும். இவ்வாறான அழுத்தங்கள் மூலம் தான் எதனையும் இங்கு நடைமுறைக்குக் கொண்டு வரலாம்.
எனவே தொடர்ச்சியான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும் என்றும் நான் அவர்களிடம் கோரியிருந்தேன் என்றார்.

thinakkural