பெயர் பலகைகளை இரு மொழிகளில் தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

0
317

அரச கரும மொழிக் கொள்கைக்கு அமைய அரச,  அரச சார்பு துறை நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் பெயர் பலகைகளை இரு மொழிகளில் தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச கரும மொழிக் கொள்கைக்கு அமைய தயாரிக்கப்படாத பெயர் பலகைகளை அரச கரும மொழிக் கொள்கைக்கு அமைவாக மாற்றுவதற்கான வழிகாட்டல்களை வழங்குவதற்கும், அவ்வாறு பெயர் மாற்றம் செய்வதற்காக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் மேலதிக நிதியினை வழங்குவதற்கும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனினால்  முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

newsfirst