சட்டவிரோத வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபட்ட ஆறாயிரத்து 176 பேர் கைது

0
274
சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல எத்தனித்த ஆறாயிரத்து 176 பேர் கைது செய்யப்படடிருப்பதாக சட்டம் ஓழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்னாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் வாசு தேவநாணயக்கார சபையில் நேற்று முன்வைத்த கேள்விக்கு அமைச்சர் சாகல ரட்னாயக்க பதிலளித்தார்.
அமைச்சர் சாகல ரட்னாயக்க :
இந்த சட்டவிரோத பயணங்களை ஏற்பாடு செய்த, அவற்றிற்கு வசதியளித்த 602 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த மூன்று மாதங்களில் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முனைந்த 20 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார்கள். இவர்கள் 50 ஆயிரம் முதல் இரண்டு இலட்சம் ரூபாவுக்கு இடைப்பட்ட ரொக்கப் பிணையையும், ஐந்து இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபா வரையிலான சரீரப் பிணையையும் செலுத்த நேரிடும். இத்தகைய விவகாரம் தொடர்பில் 246 விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளன. 74 விசாரணைகள் தொடாபில் வழக்குத் தொடுக்கப்பட்டது. மேலும் 172 விசாரணைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை நாடப்பட்டுள்ளது