காணாமல் போனவர்கள் தொடர்பாக உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக விசாரணை

0
366
காணாமல் போனவர்கள் தொடர்பான சட்ட நடைமுறைகளை மதித்து, உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக விசாரணை நடத்தப்படும். அந்த விசாரணையின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்படும் என்று சுகாதரம் போஷாக்கு மற்றும் சுதேச மருத்தவ துறை அமைச்சரும் அமைச்சரவை துணை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
வெளிநாட்டு நீதிபதிகளை இணைத்துக் கொண்டு விசாரணை நடத்த அரசியல் யாப்பில் இடமில்லை. இதனை ஜனாதிபதியும், பிரதமரும் தெளிவுபடுத்தியிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் கூறினார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.பாராளுமன்றக்கட்டிடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்ததாவது:
இவ்வாண்டுக்குள் பண வீக்கத்தையும், வாழ்க்கைச் செலவையும் கட்டுப்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது
சமகாலத்தில் பணவீக்கமும், வாழ்க்கைச் செலவும் ஓரளவு அதிகரித்துள்ளமை உண்மையே. இருந்தபோதிலும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக இவ்வாண்டுக்குள் அவை குறையும்.
மேமாதத்திற்குள் மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்கும். அரசாங்கம் முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.  இதன் காரணமாக நாட்டில் கணிசமான பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் யோசனைகளை அமுலாக்க அரசாங்கத்திற்கு இரு வருட கால அவகாசம் கிடைத்துள்ளது. இதன் பிரகாரம் 2019ஆம் ஆண்டில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென அமைச்சர் கூறினார்.