காரைதீவில் டெங்கு ஆபத்து! இன்று பிரதேசபையினரின் பரிசோதனை!

0
335
காரைதீவுப்பிரதேசத்தில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரிக்கும் சாத்தியம் கூடுதலாகவுள்ளதாக சுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர் றிஸ்னிமுத் தெரிவித்தார். 
 
அதனையடுத்து   செவ்வாய்க்கிழமை காரைதீவுப்ரபிரதேசபையினர் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் டெங்கு தடுப்புவேலைகளையும் பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.. இதன்போது பொதுச்சுகாதாரவைத்திய உத்தியோகத்தர் மற்றும் இராணுவத்தினரும் பிரதேசசபை ஊழியர்களுடன் சேர்ந்து செயற்பட்டனர்.
 
வீடுகள் கடைகள் வங்கிகள் போன்ற இடங்களில் இவர்களது பரிசோதனைகள் இடம்பெற்றன.
 
ஏலவே சாய்ந்தமருது கல்முனை தெற்கு நிந்தவூர் ஆகியபிரதேங்கள் ஆபத்துக்கூடிய பிரதேசங்களாக இருந்தன.தற்போது கல்முனை வடக்கு மற்றும் சம்மாந்துறைப்பிரதேசங்களும் இப்பட்டியலில் இணைந்துள்ளன.நாளை மத்தியிலுள்ள காரைதீவும் இப்பட்டியலில்  இணையலாம்.
 
இக்குறிப்பிட்ட 5ஆபத்துப் பிரதேசங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள காரைதீவுப்பிரதேசம் படிப்படியாக அந்த இடத்தை அடைந்துவிடும் நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக சுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர்.றிஸ்னின் முத் தெரிவித்தார்.
 
இந்த மாதத்தில் மட்டும் 24 டெங்கு தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்நிலை நீடித்தால் நிலைமை மோசமாகலாம் என்றார்.
 
பொதுமக்கள் விரும்பினால் மட்டுமே டெங்குநோயைக் கட்டுப்படுத்தலாம். வெறுமனே உத்தியோகத்தர்களுக்கு கூட்டங்களை நடாத்துவதில் பிரயோசனம் இல்லையெனக்கருதுகின்றேன்.
 
எமது பொதுச்சுகாதார பரிசோதகர்களும் ஆபத்துக்கூடிய பிரதேசங்களில் கடமையாற்ற அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதிதான் நிலையத்திற்கு திரும்புவார்கள்.
 
எனவே காரைதீவின் பொதுநலஅமைப்புகள் முன்வந்து எம்மோடு கைகோர்த்து டெங்குவைக்கட்டுப்படுத்தவேண்டும். இன்றேல் காரைதீவும் ஆபத்துக்கூடிய பட்டியலில் சேரும் என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை என்றார்.