நீரில்லை: உப உணவுப் பயிர்செய்கையை மேற்கொள்ளுங்கள். விவசாயிகளுக்கு ஆலோசனை!

0
268
– காரைதீவு  நிருபர் சகா –  அம்பாறை தமண பிரதேச செயலகத்தில் கல்லோயா வலதுகரை திட்டத்தின் 2017 சிறு போகத்திற்கான ஆரம்பக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
 
அதன்போது  போது டிஎஸ். சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் வெகுவாகக்குறைநதிருப்பதனால்  இம்முறை அனைத்து நிலங்களுக்கும் நீர்ப்பாசனம் செய்யமுடியாது என்ற கரத்தை நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
 
அதன்படி  தமன பிரிவிலள்ள மொத்த ஏக்கர் 5619 இல் 42வீதம் (2360 ஏக்கர்) ஆன நெற்காணிகளுக்கு மட்டுமே பயிர்ச்செய்கையிலீபட முடியும். அதற்கான  அனுமதி அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. 
 
அதன்படி மீதமான நிலங்களில் உப உணவுப்பயிர்களை மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.இக்கூட்டத்தில் திணைக்களத் தலைவர்கள்.விவசாயக் குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.