சவளக்கடை இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பான சந்திப்பு!

0
620
காரைதீவு  நிருபர் சகா
 
நாவிதன்வெளி சவளக்கடை இளைஞர்களுடனான எதிர்காலம் தொடர்பான சந்திப்பொன்று நேற்று நாவிதன்வெளியில் நடைபெற்றது.
 
அமைச்சர் தயாகமகேயின் இணைப்புச்செயலாளர் வி.வினோகாந் பிரதமஅதிதியாகவும் விளையாட்டு உத்தியோகத்தர் எ.முபாறக் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு கலந்துரையாடினர்.
 
படித்துவிட்டு வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைஞர்களுக்கான சுயதொழில் வாய்ப்புகள் தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
 
நாவிதன்வெளியில் 14கோடி ருபா செலவில் நிறுவப்படவிருக்கும் இளைஞர்படையணி நிலையத்தில் அதற்கான சகலவசதிகளும் செய்துதரப்படுமென இணைப்பாளர் வினோகாந்த் அங்கு தெரிவித்தார்.
 
இளைஞர்களுக்கான குறுகியகாலதொழிற்பயிற்சி மாதாந்த கொடுப்பனவுடனும் உணவு சீருடையுடனும் வழங்க ஏற்பாடுசெய்துதரப்படும் என்றும் தெரிவித்தார். தேவைப்படின் மேலதிக பயிற்சிக்கு வெளிநாடுகளுக்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கூறினார்.