கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் -கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்புக்கு விஜயம்.படங்கள்.

0
449

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்புக்கு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார் அண்மையில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் நிருவாக சபையினரின் அழைப்பின் பேரில் மேற்படி நலன்புரி அமைப்புக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சாருடன் ,மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருள் மொழியும் இணைந்து கொண்டார்.

இதன் போது கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார் கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் குறை,நிறைகள் பற்றி கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கு தன்னால் முடியுமான உதவிகளை விரைவில் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளருடனான குறித்த சந்திப்பில் கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.எம்.சாந்தி முகைதீன் ஜேபி,உப தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி),பொருளாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.ஜிப்ரி (மதனி) செயலாளர் எம். சப்ரி, உறுப்பினர்களான மௌலவி ஏ.எல். ஆதம்லெவ்வை பலாஹி ,எம்.ஏ.ஏ.எம். அப்துல் வதூத் ஜேபி, எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் ஜேபி ஆகியோரும்; கலந்து கொண்டனர்..

(பழுலுல்லாஹ் பர்ஹான்)ansar-a ansar-b