கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவுச் சங்க கேட்போர் கூட மண்டபத்தில் சந்திப்பு

0
358

தமிழ் மக்கள் பேரவையின் தலைமைச் செயலக உறுப்பினர்களுக்கும் வட,கிழக்கு மாகாண கையளிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டுபிடிக்கும் குடும்பத்தினர் சங்க உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (05) கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவுச் சங்க கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது வட கிழக்கு மாகாணங்களில் உள்ள கையளிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டுபிடிக்கும் குடும்பத்தினர் சங்க உறுப்பினர்களும் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளான ஈழமக்கள் புரட்சி கர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
மற்றும் பேரவையின் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதுடன் தற்போது வட கிழக்கில் முன்னேடுக்கப்படும்
கையளிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டுபிடிக்கும் குடும்பத்தினர் சங்க உறுப்பினர்களின் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தின் அடுத்த கட்ட செயற்பாடுகள் என்ன அவர்கள் முன்வைக்கும் கோரிக்கை என்ன என்பது பற்றியும் தமிழ் மக்கள் பேரவையினுடாக முன்னேடுக்கப்படும் ஆதரவுகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.kajendrakumar-a kajendran-b kilinochchi-a