கிழக்கு முதலமைச்சர் எங்கே? நாம் வாக்களிக்கவில்லையா?

0
310
தயவுசெய்து எங்களை ஏளனமாகப் பார்க்காதீர்கள்:நாம் என்ன பிணங்களா?
இன்று 38வது நாளாக களத்திலிருக்கும் அம்பாறை பட்டதாரியொருவர் கொட்டித்தீர்க்கிறார்!
 (காரைதீவு  சகா)
கடந்த 38நாளாக காரைதீவில் இரவு பகல் பாராமல் சத்தியாக்கிரகப்போராட்டத்திலீடுபட்டுவருகின்றோம். 
 
எமது நோக்கம் எமது படிப்பிற்கேற்ப தொழிலைப்பெறவேண்டும் என்பதே. ஆனால் இப்பிரதானவீதியால் போவோர் வருவோர் எல்லாம் எம்மைப் பிணங்களைப்போல் பார்த்துக்கொண்டு செல்கிறார்களே தவிர எமது நிலைமையைப் புரிந்துகொள்கிறார்களில்லை. தயவுசெய்து எங்களை ஏளனமாகப்பார்க்காதீர்கள்..
 
இவ்வாறு  இன்று புதன்கிழமை 38வது நாளாக காரைதீவில் போராட்டத்திலீடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் சார்பில் கருத்துரைத்த ஒரு பட்டதாரி கூறினார்.
 
அவர் மேலும் ஆக்ரோசமாக தெரிவிக்கையில்:
 
எனது தங்கச்சியை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அண்மையில் சேர்த்தபோது மனம் கனதியாகவிருந்தது. மகிழ்ச்சியடையவேண்டிய நான் கவலைப்பட்டேன். அவளும் இந்தப்பட்டப்படிப்பைமுடித்துவிட்டு என்னைப்போல் வீதியில் போராடவேண்டிவருமே என்று வேதனையடைந்தேன்.
 
கிழக்கு முதலமைச்சர் நேற்றும்கூட திருமலையில் எமது சக பட்டதாரிகளைச்சந்திந்துள்ளார். நாம் 38நாட்களாக இங்கு இருக்கின்றோம். முதலமைச்சர் இங்கு வந்து பார்க்கவில்லை. ஏன் நாம் அவருக்கு வாக்களிக்கவில்லையா? எங்கெ எமது பாராளுமனற் உறுப்பினர்கள் அமைச்சர்கள்? 
 
மக்களே அரசியல்வாதிகளே நாம் தொழில்கேட்டுப்போராடிவருகின்றோம்.
எமக்கு இந்நதஇடத்தில் இருந்து முச்சந்தியை மறித்து போக்குவரத்தை நிறுத்தமுடியும். ஆனால் அராசங்கத்திற்கு அவ்வாறு இடைஞ்சல் செய்யவிரும்பவில்லை.
 
நாம் இந்த இடத்தில் இருக்கவா? இறக்கவா? நீங்களே முடிவுசெய்யுங்கள் . மாற்றம் வரும்வரை காத்திருப்போம்.என்றார்.karaithivu-a karaithivu-b karaithivu-c

8 Anhänge